ஜேர்மனி பெற்றது முதல் வெற்றி|ஐரோப்பியக் கிண்ணம்
யூரோ கோப்பை/ஐரோப்பிய கிண்ணத்திற்கான முதலாவது குழுநிலைப்போட்டியில் ஜேர்மனி அணி அபாரமாக ஆடி , ஸ்கொட்லாந்து அணியை வெற்றிகொண்டது.
போட்டியின் நிறைவில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று முன்னிலை பெற்றது.
போட்டி துவங்கியதின் ஆரம்பம் முதலே தனது தனது சொந்த மைதானத்தில் ஆதிக்கத்தை நிலையை கொண்டிருந்த ஜேர்மனி, ஸ்கொட்லாந்தை பலமாக ஆடி தோற்கடித்தது.
போட்டியின் பத்தாவது நிமிடத்திலேயே அபாரமாக முதலாவது கோலை Wirtz அடித்தார். தொடர்ந்து Musaila மற்றும் Harvertz முதற்பாதி ஆட்டத்தின் போது மேலதிகமாக 2 கோல்களை அடிக்க ஜேர்மனி முன்னிலை பெற்றது.
அதேவேளை முதற்பாதி ஆட்டத்தின் நிறைவில் ஸ்கொட்லாந்து அணியின் Porteous , துரதிஸ்டவசமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
தொடந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஸ்கொட்லாந்து அணியினர், பத்துவீரர்களுடன் விளையாட, ஜேர்மனியின் Fullkrug மற்றும் Can ஆகியோர் மேலதிகமாகவும் 2 கோல்களை அடிக்க, ஜேர்மனி பலமாகியது.
இருப்பினும் ஸ்கொட்லாந்து அணியின் Rudiger , போட்டியின் 87வது நிமிடத்தில் ஒரு கோலை அடிக்க, அது ஸ்கொட்லாந்து அணியினருக்கு மன நிறைவானது.
நிறைவில் போட்டியை 5 -1 என்ற கோல்கணக்கில் சொந்த மைதானத்தில் அபார வெற்றியுடன் ஆரம்பித்திருக்கிறது ஜேர்மனி.
ஐரோப்பியக்கிண்ண இன்றைய போட்டிகளாக ஹங்கேரி உடன் சுவிட்சர்லாந்தும், ஸ்பெயினிடம் குரேஷிய அணியும் களங்காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.