ஒஸ்ரிய வீரர் தவறி அடித்த கோல்| பிரான்ஸ்க்கு வாய்த்த முதல் வெற்றி

ஐரோப்பிய கிண்ணத்திற்கான இன்றைய ஒரு குழுநிலைப்போட்டியில் , மிகப்பலமான விறுவிறுப்பான போட்டியில் பிரான்ஸ் அணி , ஒஸ்ரிய அணியை 1- 0 என்ற கோல்கணக்கில் வென்றது.


போட்டியின் முதற்பாதி ஆட்டத்தின்போது ஒஸ்ரிய அணியின் வீரர்  Wober , ஆட்டத்தின் 38 நிமிடத்தில் ,பிரான்ஸ் அணியின் வீரர் Kylian Mbappé அடித்த பந்தை, கோல்கம்பத்திற்கு அருகாமையில் நின்று, தலையால் தடுக்க முற்பட்டபோது பந்து கோல்கம்பங்களுக்குள் பாய்ந்தது.

படங்கள் இணைப்பு☝️


அதனடிப்படையில் பிரான்ஸ் முன்னிலை பெற , தொடர்ந்தும்  மிகவும் ஆக்ரோஷமாக கோல்களை அடிக்கும் எத்தனிப்போடு இரு அணிகளும் ஆடியிருந்தாலும் , நிறைவுவரை எந்த அணியும் அதை எட்டமுடியவில்லை.


அதன்படி நிறைவில் 1-0 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் தனது முதல் வெற்றியோடு ஐரோப்பியக்கிண்ணத் தொடரை துவங்கியிருக்கிறது.

அதேபோல பெல்ஜியம் மற்றும் ஸ்லொவோக்கியா ஆகிய அணிகள் மோதிய போட்டியில்,ஸலொவோக்கிய அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது.

அதற்கு முன்னதாக ருமேனியா மற்றும் உக்ரேன் ஆகிய அணிகள் பங்குபற்றிய இன்னுமொரு குழுநிலைப்போட்டியில், ருமேனிய அணி 3- 0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *