போர்த்துக்கல் பக்கம் அதிஷ்டம் | கடைசி நிமிடக் கோலினால் வென்றது
ஐரோப்பிய கிண்ணத்திற்கான இன்றைய ஒரு போட்டியில், போர்த்துக்கல் மற்றும் செக்குடியரசு ஆகிய அணிகள் களங்கண்டன,
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த போட்டியில் போர்த்துக்கல் 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது.
போட்டியின் முதற்பாதி ஆட்டத்தின்போது இரு அணிகளும் எந்தவிதமான கோல்களையும் அடிக்கவில்லை.
அதன்படி இரண்டாம் பாதி ஆட்டம் வெற்றியை நோக்கி சூடுபிடித்தது.
ஆட்டத்தின் 63 வது நிமிடத்தில் செக் அணியின் வீரர் LUKÁŠ PROVOD, தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து போர்த்துக்கல் அணி, தனது ஆட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாக விளையாடத் தொடங்கியது.
அதன்படி செக் அணியின் கோல்கம்பத்துக்கு அருகில் பந்தை கோல் காப்பாளரை பாய்ந்து தடுக்க அதை மீண்டும் துரதிஷ்டவசமாக, தங்கள் கோல் கம்பங்களுக்குள் அடித்த செக் வீரர் ROBINHRANÁČ, போர்த்துக்கல் அணி ஒரு கோல் எடுத்துக் கொடுத்தார்.
அதன்படி மீண்டும் 1-1 என சமநிலை பெற, ஆட்டம் மீண்டும் சூடுபிடிக்க, போர்த்துக்கல் வீரர் FRANCISCO CONCEIÇÃO ஆட்டத்தின் 92 வது நிமிடத்தில், மீண்டும் ஒரு கோல் அடிக்க, போர்த்துக்கல் வெற்றி உறுதியானது.
நிறைவில் 2-1 என்ற கோல்கணக்கில் போர்த்துக்கல் வெற்றிபெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அதற்கு முன்னதாக துருக்கி மற்றும் ஜோர்ஜியா ஆகிய அணிகள் பங்குபற்றிய இன்னுமொரு போட்டியில், துருக்கி அணி 3- 1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.