சூப்பர் 8 முதற்போட்டி| தென்னாபிரிக்கா அமெரிக்காவை வென்றது

T20 உலகக்கிண்ணப் போட்டிகளின் Super 8 போட்டிகள்  இன்று ஆரம்பிக்க , அதன் முதற்போட்டியில் தென்னாபிரிக்க அணி , அமெரிக்க அணியை தோற்கடித்தது.

குறித்த போட்டியில் அமெரிக்க அணி  வெறும் 18 ஓட்டங்களால்  தோல்வியைத்தழுவியது. 

குரலுடன் படங்கள்☝️

முதலில் துடுப்பெடுத்தாடிய  தென்னாபிரிக்கா அபாரமாக ஆடி , இருபது ஓவர்களில் 4விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களை குவித்தது.
ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் Quinton de Kock , 40 பந்துகளில் 74 ஓட்டங்களை குவித்திருந்தார்.


தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா , ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும், தொடர்ந்து நின்றுநிலைத்தாடி, 20 ஓவர்களில் 6விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து  176 ஓட்டங்களை எடுத்து தோல்வியுற்றது.


அதன்படி சுப்பர் 8 இன் முதல் வெற்றியை தென்னாபிரிக்கா தக்கவைத்து குழு A இல் முதன்னிலையை தக்கவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *