ஜேர்மனிக்கு வெற்றி| ஏனைய போட்டிகள் சமனிலை | ஐரோப்பியக்கிண்ணம்

ஐரோப்பிய கிண்ணத்திற்கான இன்று நடைபெற்ற மூன்று வெவ்வேறான போட்டிகளில், ஜேர்மன் வெற்றியுடன் முடிக்க, ஏனைய இரண்டு போட்டிகளும் சமனிலையில் முடிந்தது.

சொந்த மைதானத்தில் ஜேர்மனி அணி , ஹங்கேரி அணியை எதிர்த்தாடியது. பலமாக ஆடிய ஜேர்மனி அணி,  ஹங்கேரி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

அதேபோல குரேஷியா அணி , அல்பேனியா அணியை எதிர்த்தாடி,  2-2 என்ற கோல்கணக்கில் சமனிலையில் நிறைவுக்கு கொண்டு வந்தது.

இன்றைய நிறைவான போட்டியாக இடம்பெற்ற சுவிற்ஸலாந்து எதிர் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி, மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது. எனினும் 1-1 என்ற கோல்கணக்கில் இந்தப்போட்டியும் சமனிலை கண்டது.
இன்றைய போட்டியிலும், சுவிஸ்  அணிவீரரின் கால் தடுக்க , அவர்களின் கோல்கம்பங்களுக்குள் துரதிஸ்டவசமாக பந்து நுழைந்து ஸ்கொட்லாந்து அணி க்கு ஒரு கோலை பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *