இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி | T20 உலகக்கிண்ணம்

T20 உலகக்கிண்ண போட்டிகளின் இன்றைய  சூப்பர் 8 போட்டியில்  அதிரடியாக ஆடி வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி,  அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


ஐக்கிய அமெரிக்காவுடன் நடைபெற்ற இன்றைய போட்டியில் 10 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து, அமெரிக்காவை துடுப்படுத்தாட அழைத்தது.
அதன்படி அமெரிக்க அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 115 ஓட்டங்களை எடுத்தது.
ஆட்டத்தில் கிறிஸ் ஜொர்டன் 4 விக்கெட்டுக்களை எடுக்க ரஷிட் மற்றும் சாம் குரான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை எடுத்திருந்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 9.4 ஓவரிலேயே அதிரடியாக ஆடொ வெற்றியிலக்கை அடைந்தது.

ஆட்டத்தில் பட்லர் 38 பந்துகளில் 83 ஓட்டங்களில் விளாசியிருந்தார்.

அதன்படி super 8 குழுநிலை புள்ளிப்பட்டியலில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில், இங்கிலாந்து அணி அடுத்த அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *