ஸ்பெயினும் இத்தாலியும் அடுத்தசுற்றுக்கு| குரோசியாவின் வாய்ப்பு கடைசிநிமிடத்தில் பறிபோனது

ஐரோப்பியக்கிண்ணத்துக்கான குழுநிலைப்போட்டிகள் சூடுபிடித்தது. அதன்படி குழு பி இல் ஸ்பெயின் முதலிடத்திலும்,  இத்தாலி இரண்டாமிடத்திலும் தங்களை தக்க வைத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

குரேசியா – இத்தாலி ஆகிய அணிகள் மோதிய போட்டி மிகவிறுவிறுப்பாக நடந்து,  கடைசிநிமிடத்தில் இத்தாலி ஒருகோலை  அடிக்க குரேசியாவின் அடுத்த சுற்றுக்கனவு பறிபோனது.

நடப்பு சம்பியன்களான இத்தாலி அணியின் M. Zaccagni வீரர், 98 வது நிமிடத்தில் அடித்த கோலால் குரேஷியா உடனான போட்டி சமனிலைக்கு வர ,  இத்தாலிக்கு அடுத்த சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கியது.


முன்னதாக குரேசிய அணி 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலையில் ஆடிக்கொண்டிருக்க , மிகவும் உத்வேகத்துடன்  விளையாடிய இத்தாலி சாதுரியமாக கோல் அடித்து  அடுத்த சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *