ஐரோப்பியக் கிண்ண வெளியேற்ற சுற்று இன்று துவங்கும்| முதற்போட்டி சுவிஸ் உடன் இத்தாலி
ஐரோப்பியக்கிண்ண போட்டிகளில் குழுநிலைப்போட்டிகளிலிருந்து முன்னணி புள்ளிகளுடன் தெரிவான 16 அணிகள் மோதும் வெளியேற்ற(knocked out) சுற்றுப்போட்டிகள் இன்று துவங்குகிறது.
அதன் முதற்போட்டியில் பலமான அணிகளான சுவிற்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் மோதவிருக்கின்றன.
கடந்த ஐரோப்பியக்கிண்ண சம்பியனான இத்தாலி அணிக்கு இது சவாலான போட்டியாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. வெற்றிக்கான கணிப்புக்களில் இரு அணிகளும் பலமாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து.
அதுபோலத்தான் அடுத்த இன்னுமொரு போட்டியாக ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
போட்டிகளை ஏற்பாடு செய்யும் ஜேர்மனி அணிக்கு களச்சூழல்கள் சாதகமாக இருந்தாலும் டென்மார்க் அணியும் சளைத்த அணியல்ல என்பது உதைபந்தாட்ட ரசிகர்களின் பார்வை. இருப்பினும் ஜேர்மனி அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம் என்கிறது கருத்துகணிப்புக்கள்.
எது எவ்வாறிருப்பினும் சுவிற்ஸர்லாந்து,இத்தாலி ,ஜேர்மனி,டென்மார்க் ஆகிய நான்கு அணிகளில் இரண்டு அணிகள் போட்டிகளிலிருந்து இன்று வெளியேற வேண்டும் என்பதே நிதர்சனமாகும்.
அனைவரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் போட்டிகளான வெளியேற்ற சுற்றுப்போட்டிகளில், விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமிருக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.