ஜேர்மனியும்  சுவிஸும் காலிறுதிக்கு| டென்மார்க்கும் இத்தாலியும் வெளியேறின

ஐரோப்பியக்கிண்ணத்துக்கான குழுநிலைப்போட்டிகள் முடிவடைந்து முதற் பதினாறு அணிகள் மோதும் வெளியேற்றச் சுற்றுப் போட்டிகள் இன்று துவங்கிய நிலையில், ஜேர்மனியும் சுவிற்சர்லாந்தும் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்திருக்கின்றன.


கடந்த 2020 ம் ஆண்டு  சம்பியனான பலமான இத்தாலி அணியும்,  டென்மார்க் அணியும் இன்றைய நொக்கவுட் சுற்றில் தோற்று வெளியேறியிருக்கின்றன.

முதற் போட்டியாக இடம்பெற்ற சுவிஸ் மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் மோதிய மிக விறுவிறுப்பான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவிஸ் வெற்றிபெற்றது. இறுதி வரை போராடிய இத்தாலி பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கோல்கம்பங்களை முட்டிமோதி சென்ற பந்தால் , கோல் பெறும்  வாய்ப்புக்களைத் தவறவிட்டு தோற்று வெளியேறிருக்கிறது.


அதேபோலத்தான் ஜேர்மனியும் டென்மார்க்கும் மோதிய போட்டியும் 2-0 என்ற கோல்கணக்கில் ஜேர்மனி தங்கள் சொந்தமண்ணில் டென்மார்க்கை தோற்கடித்தது.


இந்த இரண்டு அணிகளும் நாளைய போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளோடு களங்காண இருக்கின்றன,
இங்கிலாந்தும் ஸ்லோவோக்கியா ஆகிய அணிகள் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் சுவிற்சர்லாந்து அணியும் ,  ஸ்பெயினும் ஜோர்ஜியாவும் மோதும் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் ஜேர்மனியும் களங்காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *