LPL முதற்போட்டி கண்டிக்கு வெற்றி

லங்கா பிரீமியர் லீக்கின் முதற் போட்டியில் கண்டி அணி, தம்புள்ள அணியை வெற்றிபெற்றது.
16 பந்துகள் மீதமிருக்க அதிரடியாக ஆடி வெற்றிபெற்று LPL தொடரை கண்டி துவங்கியுள்ளது.

கண்டி பல்லேகல்ல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி அணி , பந்துவீச மைதானம் வந்தது.


அதன்படி துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணி, அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 179 ஓட்டங்களை எடுத்தது.
தொடர்ந்து களமிறங்கிய கண்டி , இன்னும் அதிரடியாக ஆடி , 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்து வெற்றிபெற்றது.


ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக கண்டி அணியின் தஷூன் சானக்க அறிவிக்கப்பட்டார்.
குறித்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த சானக்க,  ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *