லங்கா பிரீமியர் லீக் |LPL இன்று துவக்கம்

சிறீலங்காவில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் | Lanka Premier league LPL இன்று துவங்குகிறது.

இன்று உள்ளூர் நேரப்படி இரவு 7 30 மணிக்கு  துவங்கும் முதற்போட்டியில் B-Love Kandy அணியை எதிர்த்து Dambulla Sixers அணி களமாட இருக்கிறது.

கண்டி பல்லேகல மைதானத்தில் இந்த முதற்போட்டி இடம்பெறவுள்ளது.


T20 உலகக்கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் கிரிக்கெட் உலகில் பேசப்படும் ஒரு போட்டித்தொடராக  இந்த LPL ம்  இருக்கிறது.
இந்த தொடரில் மொத்தமாக ஐந்து அணிகள் மோதவிருக்கின்றன. B- Love Kandy , Colombo Strikers, Dammbulla Sixers, Galle Marvels, jaffna kings ஆகிய ஐந்து அணிகளே இவை.

நடைபெற்று முடிந்த  T20 உலகக்கிண்ணப் போட்டிகளில் முதற்சுற்றிலேயே வெளியேறிய இலங்கை அணியின் பல வீரர்களும் இந்த தொடரில் பங்குபற்றுவார்கள். இருப்பினும் இந்த தொடரின் இறுதியிலாவது இலங்கை அணி சரியான 11 வீரர்களை கடைந்தெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது.

குறித்த LPL 2024 ம் ஆண்டின் தொடரானது, ஐந்தாவது தடவையாக இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *