விறுவிறுப்பான போட்டியின் முடிவில் ஸ்லோவேனியா வெளியேறியது| காலிறுதிக்கு போர்த்துக்கல்
ஐரோப்பியக்கிண்ணத்திற்கான வெளியேற்ற சுற்றுப்போட்டிகள் ( Koncked out) விறுவிறுப்பை எட்டத் துவங்கியுள்ளன. இந்தத்தொடரில் பனால்ற்றி உதைமூலம் வெற்றிதோல்வி தீர்மானிக்கப்பட்ட முதற்போட்டியாக இன்றைய போர்த்துக்கல் மற்றும் சொல்வேனிய அணிகள் மோதிய போட்டி அமைந்திருந்தது
கடைசிவரை போராடி ஸ்லோவேனியா தோற்க, போர்த்துக்கல் கடைசியாக வழங்கப்பட்ட பனால்ற்றி உதைகளின்போது 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
ஆரம்பம் முதல் இரு அணிகளுக்கும் பல்வேறு வாய்ப்புக்கள் கிட்டியிருந்தும் அவை நழுவவிடப்பட்டிருந்தன.
குறிப்பாக போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த பனால்ற்றி உதை வாய்ப்பு, அதேபோல ஸ்லோவேனியா வீரர் தனியாக கோல்கம்பம் நோக்கி பந்தை எடுத்துச்சென்று தவறவிட்ட வாய்ப்பு என பல சந்தர்ப்பங்கள் இரு அணிகளும் தவறவிட, நிறைவில் பனால்ற்றி உதைகள் மூலம் வெற்றிதோல்வி தீர்மானிக்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன்போது போர்த்துக்கல் காப்பாளர் Diogo Costa அத்தனை உதைகளையும் தடுத்து விட, ஸ்லோவேனிய காப்பாளர் கோல்களை தடுக்கமுடியாது தடுமாறினார்.
அதன்படி போர்த்துக்கல் தப்பிப்பிழைத்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.,
வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் காலிறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான பிரான்ஸ்ஸும் போர்த்துக்கல்லும் ,Volksparkstadion மைதான அரங்கில் களங்காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.