நெதர்லாந்தும் துருக்கியும் காலிறுதியில் மோதும் | ஆஸ்திரியாவும் ருமேனியாவும் வெளியேறின

ஐரோப்பியக்கிண்ணத்திற்கான வெளியேற்ற சுற்றுப்போட்டிகள் நடந்துவரும்  நிலையில்,  இன்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற நெதர்லாந்தும் துருக்கியும் காலிறுதிப்போட்டியில் மோதவுள்ளன.


இன்றைய முதற்போட்டியில் நெதர்லாந்தும் ருமேனியாவும் மோதின. ஆரம்பம் முதல் ஆதிக்கமாகவிருந்த நெதர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

அதேபோலத்தான் துருக்கி மற்றும் ஆஸ்திரியா ஆகிய அணிகள் மோதிய போட்டி நிறைவுநிமிடம் வரை விறுவிறுப்பின் உச்சத்தில் இருந்தது. போட்டி ஆரம்பித்து முதல் நிமிடம் நிறைவுபெற  முதல் கோலை அடித்து துருக்கி அசத்தியது.
தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரண்டாவது கோலையும் அடித்த துருக்கி பலம்பெற்றது.

இருந்தும் சளைக்காமல் ஆடிய ஆஸ்திரியா தொடர்ந்து ஒரு கோலை அடித்து ஆட்டத்தை உத்வேகப்படுத்தியது.
கடைசிநிமிடம் வரை பல வாய்ப்புக்களோடு ஆஸ்திரிய அணி உத்வேகத்துடன் முயன்றது. பல வாய்ப்புக்களும் ஆஸ்திரியாவுக்கு நழுவ , நிறைவில் துருக்கி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

வரும் சனிக்கிழமை நெதர்லாந்தும் துருக்கியும் காலிறுதிப்போட்டியில் பலப்பரீட்சை பார்க்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *