ஐரோப்பியக்கிண்ணம் |காலிறுதிப்போட்டிகள் இன்று துவங்கவுள்ளது
ஐரோப்பியக்கிண்ணத்துக்கான காலிறுதிப் போட்டிகள் இன்று துவங்குகிறது.
முதற் போட்டியில் போட்டியை நடாத்தும் ஜேர்மனியும் ஸ்பெயினும் மோதவிருக்கின்றன.
இரு அணிகளும் பலமான அணிகளாக வெல்லும் வாய்ப்பு எதற்கும் அமையலாம் என எதிர்பார்பின் கணிப்புக்கள் தற்போது தெரிவிக்கின்றன.
VfB Stuttgart’s soccer stadium மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில், தங்கள் சொந்த மைதானத்தில் ஜேர்மனிக்கு ஓரளவு பலம் அதிகமாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு.
இதுவரை எந்தப்போட்டிகளிலும் தோற்காத ஸ்பெயின், பலமாக ஜெர்மனியை எதிர்கொள்ளப்போகிறது என்பதும் போட்டிபற்றிய எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கிறது.
இன்று நடைபெறும் இன்னொரு போட்டியாக போர்த்துக்கல்லும் பிரான்ஸ்ஸும் நடைபெறவிருக்கிறது.
இரு அணிகளும் பலமானவைதான்.போர்த்துக்கல் சகல போட்டிகளிலும் வென்று காலிறுதிக்கு வந்திருந்தாலும் 16 அணிகள்-வெளியேற்ற சுற்றில் கடுமையாக சொல்வேனியாவுடன் போராடி காலிறுதிக்கு வந்திருக்கிறது. பிரான்ஸை பொறுத்தமட்டில் ஒருசில போட்டிகள் வெற்றியும் சமனிலையுமாக கடந்து காலிறுதிக்கு வந்திருக்கின்றது. இரு அணிகளும் இலகுவில் தோற்று வெளியேறும் என்றும் நம்பிவிட முடியாது. ஆதலால் இந்தப்போட்டியும் கடும் விறுவிறுப்பான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய காலிறுதி போட்டிகளில் , இங்கிலாந்தும் சுவிஸும், நெதர்லாந்தும் துருக்கியும் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது