சொந்தமண்ணில் தோற்றது ஜேர்மனி| அபார ஆட்டமாடி அரையிறுதிக்கு ஸ்பெயின்
ஐரோப்பியக்கிண்ண காலிறுதிப்போட்டிகளின் முதற்போட்டியில் அபார ஆட்டம் ஆடிய ஸ்பெயின் அணி , 2-1 கோல்கணக்கில் ஜேர்மனியை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.
சொந்த மண்ணில் ஜேர்மனி, மிகவும் பலத்தோடு கடைசிவரை உத்வேகத்தோடு ஆடியிருந்தாலும் தோற்று வெளியேறியிருக்கிறது.
போட்டியின் முதற்பாதிவரை எந்த கோல்களையும் அடிக்காத இரண்டு அணிகளும் இரண்டாம் பாதியில் ஆக்ரோஷமாக ஆடத்தொடங்கின.
இரண்டாம் பாது துவங்கி ஆட்டத்தின் 51 நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் D. Olmo மிக நுணுக்கமாக ஒருகோலை அடித்தார். தொடர்ந்து ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கத்தொடங்கியது.
கடைசி வரை ஜேர்மனியில் கோல் அடிக்க பல வாய்ப்புக்களை தவறவிட்டிருந்தும் , ஆட்டத்தின் 89 வது நிமிடத்தில் ஜேர்மனியின் வீரர் F. Wirtz தலையால் அடித்து பந்தை கோல்கம்பங்களுக்குள் நுழைத்தார்.
நிறைவில் போட்டி சமனிலையாக, வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் நிறைவு நேரத்தை அண்மித்தபோது 119 நிமிடத்தில் ஸ்பெயின் அணிவீரர் M. Merino பந்தை தலையால் அடித்து கோல் அடித்தார்.
தொடர்ந்து நிறைவு நிமிடங்களில் சொந்த மண்ணில் தோல்வியைத் தவிர்க்க நிறைவுவரை ஜேர்மன் போராடியிருந்தாலும், நிறைவில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் ஜேர்மனியை தோற்கடித்தது.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஸ்பெயின் தனது ஒரு வீரரை சிவப்பு அட்டையால் இழந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.