அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்தும் நெதர்லாந்தும்| போராடித் தோற்ற சுவிற்சர்லாந்தும் துருக்கியும்
ஐரோப்பியக்கிண்ண காலிறுதிப்போட்டிகளின் நிறைவாக இன்று நடைபெற்ற இருவேறு போட்டிகளிலும், இங்கிலாந்தும் நெதர்லாந்தும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
போட்டியின் நிறைவுவரை சளைக்காமல் ஆடிய சுவிற்சர்லாந்தும் துருக்கியும் துரதிஸ்டவசமாக தோற்று சுற்றை விட்டு வெளியேறின.
முன்னதாக இங்கிலாந்தும் துருக்கியும் மோதிய முதற்போட்டியில், ஆரம்பம் முதலே இரு அணிகளும் மிகப்பலமாகவே ஆடின.
போட்டியின் இரண்டாம் பாதியில் 75 வது நிமிடத்தில்தான் முதல் கோல், அதை சுவிஸ் வீரர் B. Embolo மிகவும் திறனாக கோல்கம்பங்களுக்குள் நுழைத்தார். அதைத்தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய இங்கிலாந்து, 80 வது நிமிடத்தில் கோல் அடித்து போட்டியை சமனிலைப்படுத்தியது.
இங்கிலாந்தின் Saka தனது கால்களுக்குள் வந்த பந்தை தூரத்திலிருந்து கோலாக்கினார்.
போட்டி சூடுபிடிக்க , மேலதிக நேரத்திலும் கோல்கள் அடிக்கப்படவில்லை
தொடர்ந்து வழங்கப்பட்ட பனால்ற்றி வாய்ப்புக்களில், இங்கிலாந்து 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது இங்கிலாந்து.
இதேபோல நடந்த இன்னுமொரு போட்டியான நெதர்லாந்துடன துருக்கி மோதிய காலிறுதிப்போட்டியில், ஆரம்பத்தில் முதல் கோல் துருக்கி அடித்து அசத்தியிருந்தாலும் நிறைவில் நெதர்லாந்து இரண்டு கோல்களை அடித்து வெற்றிபெற்றது.
இதன்படி நெதர்லாந்தும் இங்கிலாந்தும் வரும் புதன்கிழமை அரையிறுதிக்காக களங்காண இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.