ஐரோப்பியக்கிண்ணம் அரையிறுதி இன்று துவக்கம்| ஸ்பெயின் எதிர் பிரான்ஸ் இன்று மோதும்

ஐரோப்பியக்கிண்ண அரையிறுதிப் போட்டிகள் மியூனிச் உதைபந்தாட்ட அரங்கில் இன்று துவங்குகிறது.
முதற்போட்டியில் பலமான ஸ்பெயினும் பிரான்ஸும் களங்காணவுள்ளன.


இரு அணிகளும் வெற்றியை தட்டிப்பறிக்கும் உள்ளதாக கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 5 போட்டிகளை பொறுத்தமட்டில் ஸ்பெயின் சகல போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு வர , பிரான்ஸ் மூன்று வெற்றி மற்றும் இரண்டு சமனிலை முடிவுகளோடு அரையிறுதியில் மோதவிருக்கின்றன.


இரண்டு நாட்டு அணிகள் மோதிய கடந்த நான்கு போட்டிகளில் பிரான்ஸ் அணியே அதிகப்படியான போட்டிகளில் வென்றிருக்கிறது. ஆனால் இவை வெவ்வேறு ஆண்டுகளில் நடைபெற்றவை மட்டுமல்லாமல், வெவ்வேறு சுற்றுப்போட்டிகளில் இடம்பெற்ற போட்டிகளும் ஆகும்.


மூன்றுதடவைகள் வெற்றிக்கிண்ணத்தை எடுத்த ஸ்பெயினும் , இரண்டு தடவை வெற்றிக்கிண்ணத்தை எடுத்த பிரான்ஸ்ஸூம் இந்த அரையிறுதியில் நிச்சயம் விட்டுவிடப்போவதில்லை என்பது மட்டும் உண்மை.


எது எதுவாவிருப்பினும் இரண்டு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேற போராடும் இந்த அரையிறுதிப்போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று உலக உதைபந்தாட்ட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *