இறுதிப்போட்டியில் ஸ்பெயின் | இறுதிவரை போராடி தோற்றது பிரான்ஸ்
ஐரோப்பியக்கிண்ணத்திற்கான முதல் அரையிறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற ஸ்பெயின் இறுதிப்போட்டிக்குத் தெரிவானது.
இறுதிநிமிடம் வரை பலமாக போராடி, தோற்று பிரான்ஸ் வெளியேறியது.
ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் விரைவாக முதற்கோலை அடித்த பிரான்ஸ் பலமாக போட்டியை நகர்த்தியது.
இருப்பினும் 21 வது நிமிடத்தில் ஸ்பெயினின் இளவயது வீரர் L. Yamal அடித்த அபார கோலில் பிரான்ஸின் மகிழ்ச்சி பறிபோக, ஸ்பெயின் வீறுகொண்டெழுந்தது.
தொடர்ந்து ஆட்டத்தின் 25 வது நிடத்திலும் ஸ்பெயின் வீரர் கோல் கம்பத்துக்கு அருகே இருந்து அடித்த வேக உதையை, பிரெஞ்ச் வீரரே தவறுதலாக கோல்கம்பங்களுக்குள் நுழைத்து ஸ்பெயினுக்கு இன்னொரு கோலை உயர்த்தினார்.
அதன்பின்னர் இரு அணிகளும் விறுவிறுப்பாக ஆடியிருந்தும் கோல்கள் அடிக்காத நிலையில் 2- 1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ், ஸ்பெயினிடம் தோல்வியுற்றது.
அந்தவகையில் நாளைய போட்டியில் வெற்றிபெறப்போகும் இங்கிலாந்து அல்லது நெதர்லாந்து அணியுடன் , வரும் ஞாயிற்றுக்கிழமை வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றுவதற்காக களமாடும்.
பன்னிரண்டு ஆண்டுகளின் பின் மீண்டும் இறுதிப்போட்டி வந்துள்ள ஸ்பெயின் ஆட்டம் மிகக்கடுமையாகவே இருக்கும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக இறுதிப்போட்டிக்கு வந்த ஸ்பெயின் அணி 1984 ஆண்டில் மட்டுமே தோற்றிருக்கிறது என்பதும், ஏனைய மூன்று தடவைகளும் வெற்றுக்கிண்ணத்தை சுவீகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.