ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டி வெற்றி எந்தப்பக்கம்?|ஸ்பெயின் எதிர் இங்கிலாந்து
ஐரோப்பியக்கிண்ணத்திற்கான இறுதிப்போட்டியில் இன்று ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் களம் காண்கின்றன.
கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வியுற்ற இங்கிலாந்து, இந்தத்தடவை மீண்டும் ஒருதடவை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருக்கிறது.
ஸ்பெயின் அணியை பொறுத்த மட்டில் நான்கு தடவைகள் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு வந்து மூன்றுதடவைகள் கிண்ணத்தை கைப்பற்றியிருக்கிறது. இந்தத்தடவை ஐந்தாவது தடவையாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கும் ஸ்பெயின் , மிகப்பலமான அணிகளைவென்று பலமாகவே இறுப்போட்டியில் மோதவுள்ளது.
வெல்லும் வாய்ப்பிற்கான எதிர்பார்ப்பின் கணிப்புக்கள் , ஸ்பெயினுக்கு சற்று அதிகமாகவே எதிர்வுகூறப்படுகின்றன.
இருப்பினும் கடந்த ஐரோப்பியக்கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பனால்ற்றி வாய்ப்பில் இத்தாலியிடம் கோட்டைவிட்ட இங்கிலாந்து இந்தத்தடவை கடுமையாகப் போராடும் என்பதும் உண்மை.
எது எதுவாயினும் இன்றைய போட்டியைக் காண உலகெங்கும் உள்ள உதைபந்தாட்ட ரசிகர்கள் ஜேர்மனியின் பேர்ளின் ஒலிம்பியா மைதான அரங்கு நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இளம்வீரர்களோடு பலமாக இறுதிப்போட்டி வந்திருக்கும் ஸ்பெயின் வெல்லுமா? அல்லது மீண்டும் இறுதிப்போட்டியில் களம் காணும் இங்கிலாந்து முதற்தடவையாக கிண்ணத்தை சுவீகரிக்குமா? காத்திருப்போம்