Gareth Southgate இங்கிலாந்தின் முகாமையாளர் பதவியிலிருந்து விடைபெற்றார்
இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முகாமையாளர் Gareth Southgate, அதன் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்ததன் பின்னதாக அவர் இந்த ராஜினாமா பற்றிய செய்தியை இன்று அறிவித்துள்ளார்.
இது மாற்றத்துக்கான நேரம் , ஒரு புதி அத்தியாயத்திற்கான தொடக்கமாக இங்கிலாந்து அணிக்கு இருக்கட்டும் என , தனது ராஜினாமாவின் பின்னதாக , Southgate குறிப்பிட்டுள்ளார்.
2016 ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் முகாமையாளராக வந்த Southgate, எட்டு ஆண்டுகளாக அணியை வழிநடத்தி இங்கிலாந்து அணியை ஐரோப்பியக்கிண்ண இறுதிப்போட்டி வரை அழைத்துவந்த பெருமைக்குரியவராவார்.அத்தோடு 2018 உலகக்கிண்ணத்தில் அரையிறுதிக்கு வந்த இங்கிலாந்து ,
2022 இல் காலிறுதிவரை வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக 102 போட்டிகளுக்கு இங்கிலாந்து அணியை முகாமைத்துவம் செய்த Southgate, 61 வெற்றிகள், 24 சமநிலை மற்றும் 17 தோல்விகளை பெற்று விடைபெற்றிருக்கிறார்.
இங்கிலாந்து அணியின் பல வீரர்களும் , முன்னாள் வீரர்களும் அவரை பல தளங்களிலும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.