போர் நடத்த இது இடமல்ல- ஜோர்தான் அரசர்..!
ஜோர்தானின் அரசர் அப்துல்லா மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற பணியாளர்களுக்கிடையில் கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது.
இதன் போது மண்டல வளர்ச்சி,இருநாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துதல் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் கலந்துக்கொண்டு பேசிய ஜோர்தான் அரசர் அப்துல்லா ஜோர்தான மக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த விடத்தையும் நாடு சகித்துக்கொள்ளாது எனவும், எந்த ஒரு நாடும் போர் செய்வதற்கான இடம் ஜோர்தான் அல்ல என தெரிவித்துள்ளார்.
இதே வேளை காஸா வில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை அந்த பகுதியின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேல் மக்களின் நலன் கருதி உடனடி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துயுள்ளார்.
மேலும் போரால் பாதிப்படைந்த பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை ஐ.நா சபையானது தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.