பங்களதேஸில் இடம்பெற்றவைகளுக்கு நாங்கள் காரணமல்ல..!
ஷேக் ஹசினா வெளியேறியமைக்கு நாங்கள் காரணமல்ல என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பங்களதேஸில் நடந்த சம்பவங்களுக்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.அவை தவறாவை .எந்த உண்மையும் இல்லை. பங்களதேஸின் எதிர்காலத்தை பங்களதேஸ மக்களே தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம் இதுவே எங்கள் நிலைப்பாடு.என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரீன் ஜீன் பியர் தெரிவித்துள்ளார்.
பங்களதஸில் நடைப்பெற்ற போராட்டம் காரணமாக ஷேக்ஹசினா இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஷேக் ஹசினா இது தொடர்பாக குற்றம்சாட்டி அறிக்கை வெளியிடவில்லை என அவரது மகன் சஜீப் வாசி ஜாய் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.