கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்த விலையில் ‘டிக்கெட்’

பங்களதேஸ் கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன் போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்த தொடரானது எதிர்வரும் 21 ம் திகதி இடம் பெறவுள்ளது.

இதில் முதலாவது போட்டி ராவல்பிண்டியிலும்,இரண்டாவது போட்டி கராச்சியிலும் நடைப்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளுக்காட டிக்கட் விலை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.பாகிஸ் தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஆக குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை பாகிஸ்தான் மதிப்பில் 50 ரூபாவாக காணப்படுகிறது.
மேலும் வி.ஐ.பி டிக்கட்டுக்கள் 200 ரூபாவாகவும் ,வார இறுதி நாட்களுக்கான டிக்கட்டுக்கள் 500-600 ரூபாய்களாகவும் காணப்படுகிறது.

பங்களதேஸ் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியை பார்க்க ரசிகர்கள் வரமாட்டார்கள் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பின் மூலம் அதிக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *