அமெரிக்காவில் ஹனுமன் சிலை பிரதிஷ்டை..!
அமெரிக்காவில் உயரமான ஹனுமன் சிலை திறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்டாஸ் மாகாணத்திலேயே இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது. 90 அடி உயரமான இந்த சிலை அமெரிக்காவின் 3 வது மிக உயர்ந்த சிலையாகும்.
இந்த சிலைக்கு ஒன்றினைப்பு சிலை என பெயரிடப்பட்டுள்ளது.முதலாவது சிலை நிவ்யோர்க்கில் உல்ல சுதந்திரதேவி சிலை ஆகும் .இது 151 அடி உயரமாகும்.இரண்டாவது பெகாசஸ் மற்றும் டிராகன் சிலைகளாகும் .இவை 110 அடிகளாகும்.
அமெரிக்காவின் சுகர்லேண்ட் பகுதியிலுள்ள ஶ்ரீ அஷ்டலக்ஷ்மி வளாகத்தில் இந்த ஹனுமன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 15முதல் 18 ம் திகதி வரை பிராணபிரதிஷ்டை நிறுவப்பட்டது. இதன் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஶ்ரீ ஹனுமனின் அனுக்கிரகத்தை பெற்றனர்.