ஷேக் ஹசினா மீது இத்தனை வழக்குகளா?
பங்களதேசத்தில் ஏற்பட்ட போராட்டம் காரணமாக ஷேக் ஹசினா பதவியை துறந்து இந்தியாவில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் அங்கு முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில ஷேக் ஹசினாவிற்கு எதிரான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு பதிவு செயயப்பட்டு வருகிறது.பங்கள தேஸ் கலவரம் தொடர்பாக 42 கொலை வழக்குகள் உட்பட 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதே வேளை மேலும் 4 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ஷேக் ஹசினாவின் பாஸ்போர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவர் பங்களா தேஸத்திற்கு நாடு கடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.