கமலாஹரிஸ் தெரிவு செய்யப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்படும்..!
நவம்பர் மாதம் 5ம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறுகிறது.இதில் ஜனனாயக கட்சி சார்பாக கமலா ஹாரிசும்,குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்பும் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு பிரபலங்கள் இரு வேட்பாளர்களுக்கும் தங்களது ஆதரவினை தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில டொனால்ட் ட்ரம்பிற்கு எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனனாயகத்தையும் அமெரிக்காவையும் காப்பாற்றுவார் என்றும் கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்படும் எனவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.