அகதிகள் முகாம் மீது இஸ்ரேல தாக்குதல்..!
அகதிகள் தங்கி இருந்த முகாம் மீது இஸ்ரேல் ஆனது தாக்குதல் நடத்தியுள்ளது.
துல்கர்ம் மாகாணத்திலுள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்டவர்களின் உடல்களை துல்கர்ம் மாகாணத்திலுள்ள அரச வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு முதல் இஸ்ரேல் ஆனது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும் நீர்,மின்சாரம்,உணவு,மருத்துவம் என அத்தியவசிய தேவைகள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது.
மேலும் இந்த போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன் ,பலர் காயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.
மேற்குலக நாடுகள் இஸ்ரேலிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதே வேளை பாலஸ்தீனம் சார்பாக போரிடும் ஹமாஸ் போராளிகளுக்கு ஈரான்,ஈராக் உள்ளிட்ட சில நாடுகளும் பல அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.