குடியரசு கட்சியை சார்ந்தவர்கள் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு..!
குடியரசு கட்சியை சார்ந்த 200 பேர் ஜனனாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். குடியசு கட்சியினர் மற்றும் பழமை வாதிகளும் ஜனனாயக கட்சி வேட்பாளர் கமலாஹாரிசிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் ற்கு ஆதரவு தெரிவிப்பது மீண்டும் நாட்டிற்கு பேரிடராக அமையும் என தெரிவித்துள்ளனர். மேலும் ஒன்றாக இணைந்து கமலா ஹாரிசிற்கு வாக்களிக்கிறோம் என வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 05ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.