சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய் ஷா தெரிவு..!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து நாட்டு வாரியங்களின் ஆதரவுடன் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவரது பதவிக்காலம் டிசம்பர் 1ம் திகதி ஆரம்பமாக வுள்ளது.கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக 2028 ல் ஒலிம்பிக் போட்டிகளில் இணைப்பதே ஆகும் .இதுவே எனது முதல் வேலை ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை T20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.அதே போல் டெஸ்ட் போட்டிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தன் மீது நம்பிக்கை வைத்த அனைத்து வாரியங்களுக்கும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும்,தன்னால் முடிந்த வரை கிரிக்கெட்டின் தரத்தை உலகம் முழுவதும் உயரத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.