இஸ்ரேலின் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரின் மருமகன் உயிரிழப்பு..!
இஸ்ரேலானது லெனானில் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லா வின் மருமகன் ஹசன் ஜாபர் அல் காசிர் உயிரிழந்துள்ளார்.
சிரியாவின் டமஸ்கஸ் நகரில் அமைந்திருக்கும் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இருக்கும் போதே இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.இதன் போதே இவர் பலியாகியுள்ளார்.
குறிப்பிட்ட கட்டிடத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் ஈரான் புரட்சி காவல் படை தலைவர்வகள் அடிக்கடி வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை கடந்த மாதம் 27ம் திகதி பெய்ரூட்டில் வைத்து ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.