விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் மீண்டும் ஏவுதளத்திற்கு..!
முதன் முதலாக விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட் மீண்டும் ஏவு தளத்திற்கே வந்து சாதனை படைத்துள்ளது.
நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது டெக்டாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து ,வெற்று விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ரொக்கெட் ஐ விண்ணில் செலுத்தியது.சிறிது நேரத்தின் பின் சென்ற ரொக்கெட் இரண்டாக பிரிந்து பூஸ்டர் பகுதியை நோக்கி கீழே இறங்க தொடங்கியது .எப்படி சென்றதோ அதே போல் நெருப்பை கக்கிக்கொண்டு மெல்ல மெல்ல கீழே இறங்கியுள்ளது.பின்னர் ரொக்கெட் செலுத்தப்பட்ட கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த உலோக கரங்கள் பூஸ்டர் பகுதியை அடைந்தது.
புவி ஈர்ப்பு விசையினை மீறி மீண்டும் ஏவுதளத்திற்கே ரொக்கெட் சென்றுள்ளது.இதனையடுத்து உலகின் முதன் முறையாக ரொக்கெட்டின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வினை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினர் கொண்டாடி மகிழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.