இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இராணுவத்தினர் தாக்குதல்..!
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இஸ்ரேலிய வீரர்கள் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போதே 4 வீரர்கள் உயிரிழந்ததுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இஸ்ரேல் இராணுவத்தினர் தமது இரங்கலை தெரிவித்துள்ளது.
பாலஸதீன இஸ்ரேல் போரானது வலுப்பெற்று வருகிறது.இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக ஹிஸ்புல்லா இராணுவமானது லெபனானிலிருந்து இஸ்ரேல மீது தாக்குதல் நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.