“யுரோப்பா கிளிப்பர்” விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
யுரோப்பாவில் உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருககின்றனவா என்று ஆராய்வதற்காக யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.
6 ஆயிரம் எடை கொண்ட இந்த விண்கலம் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலமானது 62 கோடியே 82 லட்சம் கி.மீட்டர் தூரம் பயணித்து 2030ல் யுரோப்பாவின் சுற்றுப்பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுரோப்பா என்பது வியாழன் கிரகத்தை சுற்றிவரும் 95 நிலவுகளில் 4 வது பெரிய நிலவு என்பது குறிப்பிடத்தக்கது.