அதி நவீன ஏவுகணை தடுப்பினை வழங்கிய அமெரிக்கா…!
இஸ்ரேலிற்கு அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்பினை(ஏவுகணை தடுப்பு) அமெரிக்கா வழங்கியுள்ளது.அதனை இயக்குவதற்கு 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனை அமெரிக்காவின் இராணுவ தமைமையகமான பென்டகன் தெரிவிப்பு.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் இஸ்ரேலை பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பிலிருந்து அரைவாசியினர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாகவும் ,மிகுதி பகுதியினர் விரைவில் செல்லவுள்ளனர் என்றும் பென்டகன் தெரிவித்துள்ளது.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பானது பொலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பில் ரேடார்,கட்டுப்பாட்டு அறை,ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கவச வாகனம் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
இஸ்ரேல் மீது தாக்கும் ஏவுகணைகளை ரேடர் கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்,கட்டுப்பாட்டு அறையிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி கவச வாகனத்திலிருந்து ஏவுகணைகள் பாய்ந்து மற்றைய ஏவுகணைகளை நடு வானில் தாக்கி அழிக்கும்.இந்த கவச வாகனத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சுமார் 200 கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.