தக்க பதிலடி கொடுக்கப்படும்..!

இஸ்ரேலானது இன்று காலை ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.இதன் போது 2 ஈரானிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானிற்கு அருகிலுள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து ஈரான் தனது வான் எல்லையை மூடியது.அதன் பிறகு தாக்குதல் நிறைவடைந்த பின் மீண்டு வான் எல்லையை திறந்தது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆனது தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தினையடுத்து ஈரான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.”இஸ்ரேலின் தாக்குதல் சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா சாசன விதிகளுக்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளது.மேலும் ஐ.நா சாசனம் 51 வது பிரிவின் படி ,ஈரானுக்கு தங்களை தற்காத்துக்க கொள்வதற்கான உரிமையும்,வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கடமையும் உள்ளது”. என ஈரான் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *