நான் ஜனாதிபதியானால் 3ம் உலக போரை தடுப்பேன்-ட்ரம்..!
பென்சில் வேனியாவில் தேர்தல் பிரச்சார கூட்டம் நிகழ்ந்தது. இதன் போது கருத்து தெரிவித்த டொனால் ட்ரம் கமாலா ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டால் 3 ம் உலக போர் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.
” சீன ஜனாதிபதி,ரஷ்ய ஜனாதிபதி போன்ற தலைவர்களை சமாளிக்கும் அளவிற்கு கமலாவிற்கு திறமை கிடையாது.அவர் அமெரிக்க ஜனாதிபதியானால் நிச்சியம் 3ம் உலக போர் வந்துவிடும்.பல லட்சம் பேரின் வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகிவிடும்.அமெரிக்காவின் மகன்களும்,மகள்களும் ஏதோ ஒரு நாட்டில நடக்கும் போரில் சண்டையிட அனுப்பி வைக்கப்படுவார்கள்.நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிச்சியம் 3ம் உலக போர் வராமல் தடுப்பேன்”.என தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 05ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.