வெள்ளம் நிரம்பிய சஹாரா பாலை வனம்..!
சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் நிரம்பியுள்ளது.
ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு காணப்படும் சஹாரா பாலை வனத்தில் வெள்ளம் நிரம்பியுள்ளது.
இந்த பாலை வனமானது 25 இலட்சம் பழமை வாய்ந்த அதிக வெப்பமுடைய ஓர் பாலைவனமாகும்.அதற்கு முன்னைய காலக்கட்டங்களில் இங்கு ஆறுகள்,ஏரிகள் என்பன இருந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் புவிவெப்பநிலை,பருவ நிலை மாற்றம் ஆகிய காரணங்களால் சஹார பாலைவனத்தில் மழை பெய்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மொரோக்கோவில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை 50 ஆண்டுகளுக்கு மேலாக வரண்டு கிடந்த இரிக்கி ஏரியில் மீண்டும் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.