முன்கூட்டியே தனது வாக்கினையளித்த ஜோபைடன்..!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ம் திகதி நடைப்பெற உள்ளது இந்நிலையில் .ஜோபைடன் முன்கூட்டிய தனது வாக்கினை அளித்துள்ளார்.
பலர் தங்களது வாக்கினை முன்கூட்டிய அளித்து வருகின்றனர்.இந்த வகையில் ஜோபைடனும் வாக்களித்துள்ளார்.
டெலாவேர் மாநிலத்தில் அவரது வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் தனது வாக்கினை அளித்தார்.
வாக்காளர்கள் நின்ற வரிசையில் சென்று 40 நிமிடம் வரை காத்திருந்து தனது வாக்கினை அளித்துள்ளார்.காத்திருந்த தருணம் வரிசையில் நின்றவர்களுடன் சகஜமாக உறையாடினார்.இதே வேளை சக்ர நாட்காளியில் வந்த பெண்ணை தனக்கு முன்பதாக வாக்களிக்க உதவு செய்துள்ளார்.
இந்த தேர்தலில் குடியரசு கட்சிசார்பாக ட்ரமும்,ஜனனாயக கட்சி சார்பாக கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.