வெடித்து சிதறிய எரிமலை..!
ஐஸ்லாந்தில அமைந்துள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்திலுள்ள எரிமலை நேற்று மாலை முதல் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
நேற்று இரவு 11.14 மணியளவில் 3 கி.மீ நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியதாக ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வெடிப்பின் காரணமாக விமான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கிரின்டவிக் அருகே அடிக்கடி நிகழும் எரிமலை வெடிப்புகளால் உட்கட்டமைப்பு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் தங்களது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.