இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணிவிட்டார்கள், ஏன் கலிபோர்னியாவில் இன்னும் எண்ணவில்லை எலான் மாஸ்க் கேள்வி..!
இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி வாக்குகளை எண்ணி விட்டார்கள் .ஆனால் 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி வாக்குகளை இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என எலான் மாஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 05 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற்றிருந்தது. இதில் 47 வது ஜனாதிபதியா டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ம் திகதி பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் கலிபோர்னியாவில் 1.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர்.இதில் 3 இலட்சம் வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில் எலான் மாஸ்க் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.