போர் நிறுத்ததை மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ஹிஸ்புல்லா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இதற்கு ஹிஸ்புல்லா இராணுவத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலிற்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருகின்றது.இந்நிலையில் லெபனானை தலைமையிடமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கிடையில் போர் மூண்ட நிலையில் அண்மையில் போர்நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது.

இந்த உடன் படிக்கையை மீறி இஸ்ரேலானது ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *