நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் பெண் ஜனாதிபதியாக நெடும்போ நந்தி தைத்வா தெரிவு..!
நமீபியா நாட்டின் ஜனாதிபதியாக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் இங்கு தேர்தல் நடைப்பெற்றிருந்தது. இதில் தென்மேற்கு ஆப்ரிக்காவின் மக்கள் அமைப்பு கட்சி சார்பாக போட்டியிட்ட துணை ஜனாதிபதி நெடும்போ நந்தி தைத்வா வெற்றிப்பெற்றார்.இவர் 57.3% வாக்குகளை பெற்றிருந்தார்.
இதனையடுத்து நமீபியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையையும் ,ஆப்ரிக்காவின் 2வது பெண் ஜனாதிபதி என்ற சாதனையையும் அவர் தனதாக்கி கொண்டார்.