விலைப்பேசும் மனிதர்கள்..!
அசுர பேதம்
காரணம்
காரியத்தை
தேட
காரியம்
காரணத்தை
அறிய
ஒர்
பிரபஞ்ச
வெட்டவெளி
பயணம்.

உள்ளமதின்
சூட்சுமத்தில்
ஓராயிரம்
விந்தை.
மந்தை
வெளி
மேய
வழி
அறிய
மாய
கிணற்றின்
அடங்காத
தாகம்.
சலிக்காத
சல்லடையில்
கோடி
முறை
புடைத்தும்
சளிப்புகள்
இங்கு
ஏது?
வழி
வந்த
பயணத்தில்
அவரவர்
ஊர்
வந்தடைவது
மட்டும்
அவரவர்
பிராப்தமோ!
இங்கு
எந்த
பயணியும்
முழு
துணை
இல்லை.
அறிந்தும்
தெரிந்தும்
புரிந்தும்
விடையில்லா
பயணத்தில்
விலை பேசும்
மனிதர்கள்.
ஊர்
எங்கே?
ஊரணி
அங்கே!
பாலகன்
ஞானம்
அடைய
ஆயிரம்
போதனைகள்.
உறவுகளின்
சவுக்கடியில்
ஆயிரம்
தோல்
உறிப்புகள்
வார்த்தை
போர்களின்
ஆயிரம்
தோட்டாக்கள்.
அனைவருமே!
இங்கு
சுடுவதில்
வித்தகர்கள்.
மனத்தை
அன்பை
துளைப்பதில்
வல்லவர்கள்.
காரணத்தின்
கடை
தெருவில்
காரியத்தின்
விற்பனை கள்.
கேலோமி
மேட்டூர் அணை
9842131985