“சிரியா” வை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்..!
சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
2011 ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் சிராயாவிறகும் இடையில உள்நாட்டு போர் நடைப்பெற்று வந்த நிலையில் இன்று சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.இதன் மூலம் 50 ஆண்டுகால அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் முதல் கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய அரசுக்கும் இடையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மோதல் நடைப்பெற்று வந்த நிலையில் தலை நகர் டமஸ்கஸ்ஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.இதனையடுத்து சிரிய அரசு இராணுவம் பின்வாங்கிய நிலையில்,சிரிய ஜனாதிபதி
பஷார் அல் அசாத் தலை நகரை விட்டு வெளியேறினார்.இதனையடுத்து சிறையில அடைக்கப்பட்டிருந்த கிளர்ச்சியாளர் விடுவிக்கப்பட்டதுடன்.சிறியாவானது கிளர்ச்சியாளர்களின் கைவசமானது.
இதனையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பிரார்த்தனைகளில் ஈடுப்பட்டனர்.மேலும் இறைவன் மிக பெரியவன் என்று குறிப்பிட்டனர்.மேலும் பதவி கவிழ்க்கப்பட்ட சிரிய ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களையும் மக்கள் எழுப்பினர்.