வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!
பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

துருக்கியின் இஸ்பார்டா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.வழமை போன்று இராணுவ வீரர்கள் வானூர்தியில் பயிறசி மேற்கொண்டிருந்தனர்.இதன் போது இரு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதின இதனையடுத்து வானூர்தி கீழே விழுந்து நொருங்கின.
இதில் இருந்த இராணுவ ஜெனரல் உட்பட 5 வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.