தென்கொரிய ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை..!
தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலிற்கு வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் தென்கொரிய ஜனாதிபதி இராணுவ அவசரநிலையை அமுல்படுத்தி இருந்தார்.இதற்கு எதிர் கட்சியினர் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தனர்.இதனையடுத்து அவசர நிலை கைவிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள போராட்டங்கள் எழத்தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு தப்பித்து செல்லக்கூடும் என்று எண்ணி அவருக்கு வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதே வேளை அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்காக அவர் மீது விசாரணை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.