கார்த்திகை தீபம்..!
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱 *கார்த்திகை* *தீபத்திருவிழா....* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
பிரம்மாவுக்கும்
விஸ்ணுவுக்கும்
யார் பெரியவர் என்று
நடந்தது போட்டி……
நான் தான் பெரியவர் என்று
எழுந்து நின்றார்
“சிவபெருமான்”
ஜோதியாகக் காட்டி…..
யாம் கண்ட காட்சி
யாவரும் காண
வேண்டுமென்று
வேண்டுதல் வைத்தனர்…
கார்த்திகை
நட்சத்திர நாளில்
நிறைவேற்றி வைத்தார்..
அந்நாளே
கார்த்திகை தீபத்திருநாளாக இந்நாளிலும்
கொண்டாடப்படுகிறது…..
மாலையும்
இரவும் சங்கமிக்கும்
மங்கலகரமான நேரத்தில்….
வான்வெளியில் மட்டுமல்ல
அகல் விளக்கிலும் பூக்கும் விண்மீன்களின்
அழகைக் காணும் போது
கண்களில் உள்ள
இமைகளும் கல்லாகுமே….!!!
நிலவு கண்டு மலரும்
அல்லி அழகா ?
தீபங்களின்
அழகைக் கண்டு
மலரும் முகம் அழகா? என்று
பட்டிமன்றமே
வைக்கத் தோன்றுமே….!!!
மாக்கோலங்களும்
வண்ணக் கோலங்களும்
ஔிக்கோலங்களாக
மாறியிருப்பதைக்
காணும் போது
மனதில் உள்ள
கவலைகள் எல்லாம்
காலியாகுமே……!!!
ஒவ்வொரு வீடும்
மணப்பெண்ணாக
அலங்கரிக்கப்பட்டிருப்பதைப்
பார்க்கும் போது
அகம்
ஆனந்த தாண்டவம்
ஆடிடுமே……!!!
கோவில்களில்
தீபங்களின் அணிவகுப்பை
ரசிக்கும் போது
சுடாத ஜோதிப்பூக்கள்
தேகமெங்கும்
சுடர் விட்டிடுமே……!!!
ஆலயங்களில்
விளக்கேற்றும்
பெண்களுக்கு இடையில்
சுடர் விடும்
அகல் விளக்கின் அழகையும்….
சுடர்விடும்
அகல் விளக்குகளின்
இடையில்
விளக்கேற்றும்
பெண்களின் அழகையும்
ரசிக்கும் போது
மகிழ்ச்சி தீபங்கள்
மனதில் ஏற்றப்படுமே…..!!!
தீபாவளியை
திட்டமிட்டே !
மிச்சம் வைக்கப்படுகிறது….
திருக்கார்த்திகை
தீப ஔியோடு
தீபாவளி ஒலியை
சங்கமம் செய்து
சந்தோஷமடைந்திடவே…..!!!
திருவண்ணாமலையில் ஏற்றும்
மகா தீபத்தில் மட்டுமல்ல
சிறுமனையில் ஏற்றும்
சின்ன தீபத்திலும்
அண்ணாமலையார்
காட்சியளிப்பதால்
அனைத்து தீய சக்திகளும்
அழிந்து போகுமே……!!!
அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்…. *கவிதை ரசிகன்*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱