மழையுடனான வானிலை..!

மழையுடனான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தென்கிழக்கு வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும்
இது மேலும் வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து,
அடுத்த இரண்டு நாட்களில் இலங்கைக்கு வடக்கே இலங்கைக்கு அருகில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், நடாடின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும்,

சில இடங்களில் சுமார் 100 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

மேற்கு கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் ஒருசில மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது,

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *