“விபத்திற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்”-ரஷ்ய ஜனாதிபதி

அஜர் பைஜானில் இருந்து ரஷ்யாவிற்கு பயணித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரஷ்யாவிற்கு சென்ற அஜர்பைஜான் எயார் லைன்ஸிற்கு சொந்தமான விமானம் குரோன்ஸி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் திருப்பி விடப்பட்ட நிலையில் கஜகஸ்தானில் தரையிறங்க முயற்சித்த போது தரையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொழிநுட்ப வெளிப்புற குறுக்கீடு மற்றும் வெளிப்புறத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அஜர்பைஜான் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் ரஷ்ய ஜனாதிபதி இவ்விபத்து தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.”துயரமான சம்பவம் ரஷ்யாவின் வான் பகுதிக்குள் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.விமான விபத்து ஏற்பட்ட நேரத்தில் கிரோஸ்னி,மொஸ்டோக்,விளாடிகாவ்காஸ் ஆகியவற்றின் மீது உக்ரைனின் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியது.இதற்கு ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியது” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *