தரையிறங்க முயற்சித்த போது விபத்துக்குள்ளான விமானம்..!
தாய்லாந்திலிருந்து தென்கொரியா வந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஜேஜூ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானம் 181 பேருடன் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த வேளையில் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது 124 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.